Monday 31 December 2012

சரணம் சரணம் என்றுன்


சரணம் சரணம் என்றுன் சன்னதிக்கு வந்தேன் மனசஞ்சலங்கள் தீருமையா சபரீசா 
அச்சன் கோவிலின் அரசே அனுதினம் உன்னை பாட அனுக்ரஹம் செய்ய இங்கு வருவாயே 

ஆரியங்காவில் வாழும் அசார  சீலனே என்னை ஆதரித்து ஆட்கொள்ளும் ஆதிதேவா 
இன்னமும் தாமதம் ஏனோ இருமுடி உடையோனே இகபர சுகம் தந்த இகபாலா 

ஈரேழு லோகம் எங்கும் ஈசன் உன்போலுண்டோ ஈஸ்வரன் பெற்ற திரு சிவபாலா 
உனதருட் பார்வையினால் உலகம் எல்லாம் வாழுமே உனதருள் பெற வந்தோம் உமைபாலா 

ஊமைக்கருள் புரிந்தவனே ஊசலாடிடும் மனதை ஊடுருவி ஆட்கொள்ளும் ஊர்காவலா 
எங்கள் குலதெய்வமான எருமேலி வாழ் நாயகா எங்கள் குறை தீருமையா என்குருநாதா 

ஏழைப்பங்காளனான ஏட்டு மானுரப்பன் பெற்ற ஏரகத்தின் செல்வமான ஏகாந்தவாசா
ஐங்கரனின் சோதரனே ஐராவத வாகனனே ஐயமெல்லாம் தீர்த்துவைக்கும் ஐயனாரே 

ஒன்றே குலம் என்றுரைத்து ஒன்றிய சிவன்மாலுக்கு ஒன்றாகி உருவமாகி நின்ற பாலா 
ஓம்கார பொருளெல்லாம் ஓதி உணர்ந்தவனே ஓடி வந்தோம் உன்னை காண அருள்தாராய் 

ஔவைக்குபதேசம் செய்த ஔஷதமாம் தணிகைமலை கந்தனுக்கு சோதரனே கானகவாசா 
அக்ஹ்ரினை உலகினிலே உயிரினம் எல்லாம் காத்து ஆதரிக்கும் தெய்வமே நீ அருள்தாராய்   - (சரணம்)

No comments:

Post a Comment