Friday 26 July 2019

திருப்பனையாண்டவர் துதி

திருப்பனையில் உதித்தவனாம் தீராத வினைகள் தீர்ப்பவனாம்
வள்ளி மாநகரில் வடதிசையில் அமர்ந்தவனாம்
நினைத்து துதிப்போர்க்கு நெஞ்சினில் நிறைந்தவனாம்
ஏற்றி தொழுபவர்க்கு எதிரில் வந்து நிற்பவனாம்
மனதார துதிப்பவர்க்கு மங்களங்கள் அருள்பவனாம்
பாடி துதிப்பவர்க்கு பக்கத்தில் வருபவனாம்
பேச்சியம்மா துணை கொண்டு பேரின்பம் அளிப்பவனாம்
என்றென்றும் துதிப்பவர்க்கு எங்கெங்கும் நிறைந்தவனாம்
சிவபனை ஆண்டவனாம் சீரான பேருடையான்
சிக்கலை தீர்ப்பவனாம் சிந்தை குளிர்விப்பவனாம்
என்றென்றும் துணையிருப்பான் எங்கள் குலநாயகனும்
சிந்தை மகிழ்ந்தும் சீருடன் துதிக்கும்கால்.

--------- * ------------------ * ---------

எண்ண எண்ண இனிக்குதய்யா எங்கள் குலதேவனே (2)

பக்தி பரவசமாய் பணிந்துணை பூஜித்தேன்
பக்தரை காத்துமே பக்க துணை நீயிருப்பாய் - எண்ண எண்ண

அல்லும் பகலும் உன்னை அன்புடன் நேசித்தேன்
அல்லல் வராமல் காத்து அனுக்கிரஹம் செய்வாய்
செய்வினை யாவும் உன் ஜெபத்தில் மறைந்திடுமே
ஜெய ஜெய ஜெயவென ஜெயகோஷம் செய்திடுவோம் - எண்ண எண்ண

Friday 7 June 2019

ஐயப்பன் லாலி

அழகு மணிமண்டபத்தில் அம்மை உமை பாலகனாய்
அமர்ந்திருக்கும் அழகா (2)
ஆனந்த ஜோதியாக(2)
அருள் செய் மணிகண்டா லாலி

தூய உடைதான் அணிந்து துளசி மணி மேல் அணிந்து
தேடி வருவோர்க்கு (2) உன்னை
வன்புலியில் தோன்றிடுவாய் (2)
வீரமணிகண்டா லாலி

இருமுடி யை சுமர்ந்து கொண்டு இன்னல்களை தாங்கிக்கொண்டு
ஐந்து மலை ஏறும் (2)
அன்பர்களை காத்திடுவாய்(2)
அழகு மணிகண்டா லாலி

அறும்பு போல சிரித்து கொண்டு குறும்பு மொழி பேசி கொண்டு
துள்ளி வரும் அழகா (2)
விரும்பி வரும்  அடியவர்க்கு (2) உன்னை
கரும்பு  மணிகண்டா லாலி

சங்கரனின் புத்திரனே சகலகலா வல்லோனே
சரணமடைந்தோமே (2) உன்னை
சங்கடங்கள் தீர்ந்திடுவாய்(2)
சரசமணிகண்டா லாலி

காந்தமலை வாசா உந்தன் கற்பூர ஜோதிதனை
காண வருவோர்க்கு(2)
கண்குளிர காடசி தந்து(2)
காப்பாய் மணிகண்டா லாலி