Monday 31 December 2012

சரணம் சரணம் என்றுன்


சரணம் சரணம் என்றுன் சன்னதிக்கு வந்தேன் மனசஞ்சலங்கள் தீருமையா சபரீசா 
அச்சன் கோவிலின் அரசே அனுதினம் உன்னை பாட அனுக்ரஹம் செய்ய இங்கு வருவாயே 

ஆரியங்காவில் வாழும் அசார  சீலனே என்னை ஆதரித்து ஆட்கொள்ளும் ஆதிதேவா 
இன்னமும் தாமதம் ஏனோ இருமுடி உடையோனே இகபர சுகம் தந்த இகபாலா 

ஈரேழு லோகம் எங்கும் ஈசன் உன்போலுண்டோ ஈஸ்வரன் பெற்ற திரு சிவபாலா 
உனதருட் பார்வையினால் உலகம் எல்லாம் வாழுமே உனதருள் பெற வந்தோம் உமைபாலா 

ஊமைக்கருள் புரிந்தவனே ஊசலாடிடும் மனதை ஊடுருவி ஆட்கொள்ளும் ஊர்காவலா 
எங்கள் குலதெய்வமான எருமேலி வாழ் நாயகா எங்கள் குறை தீருமையா என்குருநாதா 

ஏழைப்பங்காளனான ஏட்டு மானுரப்பன் பெற்ற ஏரகத்தின் செல்வமான ஏகாந்தவாசா
ஐங்கரனின் சோதரனே ஐராவத வாகனனே ஐயமெல்லாம் தீர்த்துவைக்கும் ஐயனாரே 

ஒன்றே குலம் என்றுரைத்து ஒன்றிய சிவன்மாலுக்கு ஒன்றாகி உருவமாகி நின்ற பாலா 
ஓம்கார பொருளெல்லாம் ஓதி உணர்ந்தவனே ஓடி வந்தோம் உன்னை காண அருள்தாராய் 

ஔவைக்குபதேசம் செய்த ஔஷதமாம் தணிகைமலை கந்தனுக்கு சோதரனே கானகவாசா 
அக்ஹ்ரினை உலகினிலே உயிரினம் எல்லாம் காத்து ஆதரிக்கும் தெய்வமே நீ அருள்தாராய்   - (சரணம்)

Thursday 6 December 2012

விநாயகர் ஸ்துதி

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே 
                                                                     (ப்ரபோ கணபதே)
சார்ந்து வணங்கி துதி பாடியாடி உந்தன் 
சன்னதி சரணடைந்தோமே 
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சத்குரு நீயே - எமக்கு 
                                                                     (ப்ரபோ கணபதே)
ஆதிமூல கணநாத கஜானன 
அற்புத தவள ஸ்வரூபா - அதி 
தேவ தேவ ஜெய விஜய விநாயக 
சின்மய பரசிப தீபா - தவ 
                                                                     (ப்ரபோ கணபதே)
தேடி தேடி எங்கோ ஓடுகின்றாய் உன்னை 
தேடி கண்டுகொள்ளலாமே 
கோடி கோடி மதயானைகள் பணிசெய்ய 
குன்றென விளங்கும் பெம்மானே - குண
                                                                     (ப்ரபோ கணபதே)
பார்வதி பால அபார வாரவர 
பரம பகவத் பவ தரனா 
பக்த ஜனசுமுக பிரணவ விநாயக 
பாவன பரிமள சரணா - பரி
                                                                     (ப்ரபோ கணபதே)
ஞான வைராக்கிய விசார சாரச்வர 
ராகலய நடன பாதா - ஸ்வர 
நாம பஜன குண கீர்த்தன நவவித - ஐயப்ப
நாயக ஜெய ஜகந்நாதா  - நவ 
                                                                     (ப்ரபோ கணபதே)

பராசக்தி ஸ்துதி

அகணிததாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகிறாள் 
சகலசாகரத்தும்  தங்கச் சிலம்பொலிக்க ஜகதீஸ்வரியவள்  ஆடுகிறாள்

அயனென வருவாள் அனைத்தையும் படைப்பாள் 
ஹரியென காப்பாள் ஹரனென  அழிப்பாள் 
அழிவிலிருந்து ஜீவன் பிறந்திட செய்பவளாம் 
அகிலாண்டேஸ்வரி  ஆடுகிறாள்

அகன்ற இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் 
ஆழபெருங்கடலில் வாழும் உயிரினங்கள் 
அன்றன்ருணவு பெற அத்தனைக்கும் தந்தருளும் 
அன்னபூர்நேஸ்வரி ஆடுகிறாள் 

கனக கமலந்தனில் கனிந்த சிவப்பொருளை 
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவாம் 
நானற்ற நல்லோர்கெல்லாம் நானிதோ என்று சொல்லும் 
ஞானபரமேச்வரி ஆடுகிறாள் 

அருளென வருவாள் அனைத்தையும் தருவாள் 
அன்பனுக்கு அருள்வாள் அமுதகல்யாணியவள் 
அகத்திய மாமுனி தமிழ்மொழி நல்கிட்ட 
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகிறாள் 

இதயவீணை எழும் இன்னிசை அவளே 
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே 
நாற்பத்துமூன்று கோடி நாத மணிமண்டபத்தில் 
ஸ்ரீலலிதேச்வரி ஆடுகிறாள்