Thursday 6 December 2012

பராசக்தி ஸ்துதி

அகணிததாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகிறாள் 
சகலசாகரத்தும்  தங்கச் சிலம்பொலிக்க ஜகதீஸ்வரியவள்  ஆடுகிறாள்

அயனென வருவாள் அனைத்தையும் படைப்பாள் 
ஹரியென காப்பாள் ஹரனென  அழிப்பாள் 
அழிவிலிருந்து ஜீவன் பிறந்திட செய்பவளாம் 
அகிலாண்டேஸ்வரி  ஆடுகிறாள்

அகன்ற இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் 
ஆழபெருங்கடலில் வாழும் உயிரினங்கள் 
அன்றன்ருணவு பெற அத்தனைக்கும் தந்தருளும் 
அன்னபூர்நேஸ்வரி ஆடுகிறாள் 

கனக கமலந்தனில் கனிந்த சிவப்பொருளை 
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவாம் 
நானற்ற நல்லோர்கெல்லாம் நானிதோ என்று சொல்லும் 
ஞானபரமேச்வரி ஆடுகிறாள் 

அருளென வருவாள் அனைத்தையும் தருவாள் 
அன்பனுக்கு அருள்வாள் அமுதகல்யாணியவள் 
அகத்திய மாமுனி தமிழ்மொழி நல்கிட்ட 
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகிறாள் 

இதயவீணை எழும் இன்னிசை அவளே 
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே 
நாற்பத்துமூன்று கோடி நாத மணிமண்டபத்தில் 
ஸ்ரீலலிதேச்வரி ஆடுகிறாள் 

No comments:

Post a Comment