Monday 18 October 2021

தெக்கே தெரு பகவதி வரவு

 பல்லவி

காமாக்ஷி எழுந்தருளினாள்
மோஹினி காமாக்ஷி எழுந்தருளினாள்
ஈசன் மோஹினி காமாக்ஷி எழுந்தருளினாள்
காமேஸ்வரன் மோஹினி காமாக்ஷி எழுந்தருளினாள்

அனுபல்லவி

மாமுனிவர்  தேவர் சித்தர் சாரணத்தில் பொருத்தமாக
மாமலர்கள் தூவி வாழ்த்த வானமாதர் பாட மாலயன் கொண்டாட (காமாக்ஷி)

சரணம்

நான்கு யோஜனை வீதி பரந்து நன்றாய் ஒரு பது யோஜனை சிறந்து
ஓதும் நால் வேதம் ஒன்றிலாய் அமர்ந்து புஜங்கம் ஆனந்தம் துவிஜமாய் சிறந்து
தாங்கும் தர்மாதி குதிரைகள் இழுக்க தழைத்த சாமரம் வெண்குடை பிடிக்க
நீங்காத ஜோதி சக்ர ரதம் கொண்டு நித்யா முதலான சக்தி பூஜை கொண்டு (காமாக்ஷி)

மேக யானைகள் ஏறும் சக்திகள் யாளி சிம்மங்கள் ஏறும் சக்திகள்
மேக அஸ்வங்கள் ஏறும் சக்திகள் மருகங்கள் பக்ஷிகள் ஏறும் சக்திகள்
மோக சக்திகள் யோக சக்திகள் பூத சக்திகள் நாத சக்திகள்
போக சக்திகள் முழுதுலகமும் முயலும் சக்திகள் அனைவரும் சூழ (காமாக்ஷி)

ஆவாரணமும் ஒன்பது சக்திகள் அப்பாலும் இப்பாலும் ஆனந்த சக்திகள்
தேவர்கள்  அம்சமான சக்திகள் திதிவார நட்சராதி சக்திகள்
காவல் சக்திகள் இதுவல்லாமலும் கணநாதன் பைரவாதிகள் சூழ
சேவை புரியும் தேவர்க்கிணங்கி வீரன் தீரன் பண்டாசுரனின் போருக்கு (காமாக்ஷி)