Wednesday, 2 October 2024

மாடன் வரானே

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே


அந்திப் பூச்சந்தையிலே மாடனும்

ஆடிக் கொண்டாடி வரான்

சுந்தரத் தோழனுக்கு மாடனும்

சொல்லிக் கொண்டாடி வரான்

( மாடன் வரானே


அந்தகாரப் பேய்களெல்லாம்

அங்கிருந்து ஆடிக் கொண்டாடி வர

தெந்தினத் தினாவென்று மாடனும்

ஆடிக் கொண்டாடி வரான்

( மாடன் வரானே


மஞ்சளைப் பூசிக் கொண்டு மாடனும்

மஞ்சள் நீராடையிலே

வங்காள இசக்கியுடன் மாடனும்

மாடோடும் கையிலேந்தி

( மாடன் வரானே


கையில் குண்டாந்தடியும் மாடனுக்குக்

காலினில் சல்லடமாம்

கண்கள் தீப்பொறிப் போல மாடனுக்குக்

கழுத்துக்குத் தாவடமாம்

( மாடன் வரானே


வெண்பட்டுத் தானுடுத்தி மாடனும்

வேட்டைக்குப் போகையிலே

வெறிக்கல் இசக்கி வந்து மாடனைக்

கும்பிட வந்தாளாம்

( மாடன் வரானே


திருநீறுப் பூசிக் கொண்டு மாடனும்

தீச்சட்டிக் கையிலேந்தி

தெற்கு திசை நோக்கி மாடனும்

சீறி அலறி வரான்

( மாடன் வரானே


கருத்த சித்தாடை இசக்கி

கையில் வளை அடுக்கி

காட்டெருமை மீதில்

மாடனைக் காணவே வந்தாளாம்

( மாடன் வரானே


வீரபத்ரனுடன் மாடனும்

வேகமாய் முன் நடக்க

மணிகண்டர் சன்னதியில்

மாடனும் விந்தையாய் ஆடி வரான்


மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

Monday, 21 November 2022

பூதத்தான் வரவு

பூதத்தான் வரவு

பட்டக்குடி பூதத்தான் வரார் ப்ராபல்யமாக
சாட்டையில்லாமல் பூசுரன்
கூட்டமாய் கைகட்டி நிற்க
கேட்ட வரங்கள் கொடுக்க
ஓட்டமாய் உல்லாசத்துடன்     (பட்டக்குடி)

வனம் தன்னிலே இருந்து
அனந்த நகரில் வந்து
நினைத்ததெல்லாம் கொடுத்து
குணம் தந்து இரட்சிக்கவே     (பட்டக்குடி)

குற்றம் குறைகள் வராமல்
புத்தன் தெருவின் நடுவில்
நித்தியமாக வசித்து
பக்தர்களை காத்திடவே         (பட்டக்குடி)

ஈட்டி முகரம் கதையும்
தோட்டி கட்கம் குந்தம் பாசம்
தீட்டிய வாள் பரிசையும்
பூட்டின வில் அம்பும் கொண்டு    (பட்டக்குடி)

கோடி ஜனங்கள் கூடியே
மோடியாய் பூச்சடை போட்டு
பாட்டு வாத்யங்கள் முழங்க
ஆடிச்சாடி சுவாமி இதோ        (பட்டக்குடி)

வீரபத்ரன் கருப்பன்
வீரன் செல்லப்பிள்ளை மாடன்
சூரன் பைரவன் சுடலை
கோடிப் பரிவாரம் சூழ        (பட்டக்குடி)

சுந்தரயெக்ஷி இசக்கி
செந்தவை சாமுண்டிச் சாத்தன்
சுந்தர பூதங்கள் பந்தம்
தீவட்டிப் பிடித்துக்கொண்டு    (பட்டக்குடி)

சிங்கங்கடுவாய்க்கரட
எங்கும் யானை கூட்டங்களும்
செங்குரங்கு பன்னிப் புலி
செங்களமாய் வேட்டையாடி    (பட்டக்குடி)

மண்டலத்தில் மானிடர்க்கு
கண்ட வியாதிகள் வராமல்
குண்டாந்தடியால் விரட்டும்
சண்டப்பிரசண்டராய் இதோ    (பட்டக்குடி)

சத்யவாகீஸ்வரர் இவர்
ஆதிகுரு பூதத்தானே
நித்யமாய் மானிடரெல்லாம்
பக்தியாய் ஸ்துதிகள் செய்ய    (பட்டக்குடி)

Sunday, 9 October 2022

சிவன் ஸ்துதி: ஆனந்த கூத்தனின் தாண்டவ தரிசனம்



ஆனந்த கூத்தனின் தாண்டவ தரிசனம்
ஆனந்த மானந்தமே - சிவகாமி மனோகரி (ஆனந்த)

மோனத் தவம் கலைந்து ப்ரேமாம்ருதம் சுரந்து
காமேஸ்வரி அன்னையுடன் களிநடனம் புரியுகும் (ஆனந்த)

நாயகன் ஆடினான் நாயகி பாடினாள்
நாயகி ஆடினாள் நாயகன் பாடினான்
ஆடலிலே அவர் பாடலிலே நாயகன் நாயகி கூடலிலே
நாத ஓம்கார கணபதி ஆடிட
நாத ஹரீம்கார சரவணன் ஆடிட

அவன் ஆட  அவள் ஆட.. அவன் ஆட அவள் ஆட..
கணபதி ஆட சரவணன் ஆடிட (அவன் ஆட)
தத் ஓம் தத் ஓம் - சிவ தத் ஓம் பர தத் ஓம் (3)
தத்வங்கள் ஆட அண்ட சராசரம் அழகு பண்பாட
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய
மஹாதேவாய த்ரிபுராந்தகாய த்ரிகாலாக்னி காலாய
காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய
சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ! (ஆனந்த)

Tuesday, 29 March 2022

Sabarimalai Vaasa

சபரி மலைவாசா 

சபரி மலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா தேவா (சபரி)

உறவு எல்லாம் இங்கே உண்மை இல்லை (2)
பிறவி பயன்பெற அருள் ஈசா (சபரி)

வாழ்க்கை எனும் பயணம் காரிருளில் அய்யா
வழியறியாதலையும் நேரம்
உன் திரு தீபத்தின் பொன்னொளி காட்டியே
அருள்மழை பொழிகுவாய் ஐயப்பா
உன்னை அடைந்திட ஒரு வழி செய்யப்பா (சபரி)

சொந்த பந்தங்கள் காத்திட அலைந்திடும்
வாழ்க்கை வாழ்ந்திடல் தேவையோ
சூன்யமன்றோ கானல் நீரல்லவோ வாழ்க்கை
நித்தியமானவன் நீயன்றோ
என்றும் சத்தியமானவன் நீயன்றோ (சபரி)

Wednesday, 15 December 2021

எப்போதான் இரங்குமோ - சாஸ்தா பாட்டு

 

எப்போதான் இரங்குமோ எங்கள் மணிகண்டா
அப்பனே நீர் எழுந்தருளும்




Sunday, 14 November 2021

சௌபாக்கிய பஞ்சதசாக்ஷரி

சௌபாக்கிய பஞ்சதசாக்ஷரி
சகல புவன காரணி
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் (சௌ)

ஸ்வேதாம்பர சம்பு மோஹினி
பீதாம்பர ஷ்யாமள வர்ண ரூபிணி
ஐம் க-எ-ஈ-ல-ஹ்ரீம்
க்லீம் ஹ-ஸ-க-ஹ-ல-ஹ்ரீம்
சௌ ஸ-க-ல-ஹ்ரீம் ஸ்ரீம் (சௌ)

சஹஸ்ர கமலாம்பிகே
சதானந்தாம்ருதோத் பவே ஜ்வலே
சோம ஸூர்ய லோசனே சுலோசனே
காம காமேஸ்வரா லிங்கிதஸ்திதே
ஐம் க-எ-ஈ-ல-ஹ்ரீம்
க்லீம் ஹ-ஸ-க-ஹ-ல-ஹ்ரீம்
சௌ ஸ-க-ல-ஹ்ரீம் ஸ்ரீம் (சௌ)

Monday, 18 October 2021

தெக்கே தெரு பகவதி வரவு

 பல்லவி

காமாக்ஷி எழுந்தருளினாள்
மோஹினி காமாக்ஷி எழுந்தருளினாள்
ஈசன் மோஹினி காமாக்ஷி எழுந்தருளினாள்
காமேஸ்வரன் மோஹினி காமாக்ஷி எழுந்தருளினாள்

அனுபல்லவி

மாமுனிவர்  தேவர் சித்தர் சாரணத்தில் பொருத்தமாக
மாமலர்கள் தூவி வாழ்த்த வானமாதர் பாட மாலயன் கொண்டாட (காமாக்ஷி)

சரணம்

நான்கு யோஜனை வீதி பரந்து நன்றாய் ஒரு பது யோஜனை சிறந்து
ஓதும் நால் வேதம் ஒன்றிலாய் அமர்ந்து புஜங்கம் ஆனந்தம் துவிஜமாய் சிறந்து
தாங்கும் தர்மாதி குதிரைகள் இழுக்க தழைத்த சாமரம் வெண்குடை பிடிக்க
நீங்காத ஜோதி சக்ர ரதம் கொண்டு நித்யா முதலான சக்தி பூஜை கொண்டு (காமாக்ஷி)

மேக யானைகள் ஏறும் சக்திகள் யாளி சிம்மங்கள் ஏறும் சக்திகள்
மேக அஸ்வங்கள் ஏறும் சக்திகள் மருகங்கள் பக்ஷிகள் ஏறும் சக்திகள்
மோக சக்திகள் யோக சக்திகள் பூத சக்திகள் நாத சக்திகள்
போக சக்திகள் முழுதுலகமும் முயலும் சக்திகள் அனைவரும் சூழ (காமாக்ஷி)

ஆவாரணமும் ஒன்பது சக்திகள் அப்பாலும் இப்பாலும் ஆனந்த சக்திகள்
தேவர்கள்  அம்சமான சக்திகள் திதிவார நட்சராதி சக்திகள்
காவல் சக்திகள் இதுவல்லாமலும் கணநாதன் பைரவாதிகள் சூழ
சேவை புரியும் தேவர்க்கிணங்கி வீரன் தீரன் பண்டாசுரனின் போருக்கு (காமாக்ஷி)