மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
அந்திப் பூச்சந்தையிலே மாடனும்
ஆடிக் கொண்டாடி வரான்
சுந்தரத் தோழனுக்கு மாடனும்
சொல்லிக் கொண்டாடி வரான்
( மாடன் வரானே
அந்தகாரப் பேய்களெல்லாம்
அங்கிருந்து ஆடிக் கொண்டாடி வர
தெந்தினத் தினாவென்று மாடனும்
ஆடிக் கொண்டாடி வரான்
( மாடன் வரானே
மஞ்சளைப் பூசிக் கொண்டு மாடனும்
மஞ்சள் நீராடையிலே
வங்காள இசக்கியுடன் மாடனும்
மாடோடும் கையிலேந்தி
( மாடன் வரானே
கையில் குண்டாந்தடியும் மாடனுக்குக்
காலினில் சல்லடமாம்
கண்கள் தீப்பொறிப் போல மாடனுக்குக்
கழுத்துக்குத் தாவடமாம்
( மாடன் வரானே
வெண்பட்டுத் தானுடுத்தி மாடனும்
வேட்டைக்குப் போகையிலே
வெறிக்கல் இசக்கி வந்து மாடனைக்
கும்பிட வந்தாளாம்
( மாடன் வரானே
திருநீறுப் பூசிக் கொண்டு மாடனும்
தீச்சட்டிக் கையிலேந்தி
தெற்கு திசை நோக்கி மாடனும்
சீறி அலறி வரான்
( மாடன் வரானே
கருத்த சித்தாடை இசக்கி
கையில் வளை அடுக்கி
காட்டெருமை மீதில்
மாடனைக் காணவே வந்தாளாம்
( மாடன் வரானே
வீரபத்ரனுடன் மாடனும்
வேகமாய் முன் நடக்க
மணிகண்டர் சன்னதியில்
மாடனும் விந்தையாய் ஆடி வரான்
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே
No comments:
Post a Comment